இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பினருக்கும் இடையில் சமீபத்தில் ஒரு ஆரம்ப ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு நிலைமைக்கான பேச்சுவார்த்தைகளில் கனடா தீவிரமாக ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில், இது குறித்து முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் மார்க் கார்னி ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிணைக் கைதிகள் விரைவில் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள் என்பதில் தாம் நிம்மதி அடைவதாக, பிரதமர் கார்னி தனது சமூக ஊடகப் பதிவில் கருத்துரைத்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்ட விதிமுறைகள் அனைத்தையும் விரைவாக நடைமுறைப்படுத்தி, நீதியான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிச் செயல்பட வேண்டும் என்று கனடா அழைப்பு விடுப்பதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
