கனடா பிரதமர் மார்க் கார்னி அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களை செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
கனடாவின் இரும்பு உற்பத்திகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கட்டணங்களில் (Steel Tariffs) பகுதியளவு சலுகையைப் பெறுவதே, இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக, உள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது 50 சதவிகிதமாக உள்ள இந்தக் கட்டணங்களில் (Tariffs) எந்தவொரு சலுகை கிடைத்தாலும், அது கனடாவின் மற்ற இறக்குமதிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள கட்டணங்களை (Tariffs) குறைப்பதற்கான ஒரு வழிகாட்டியாக (Framework) அமையும் என கனேடிய தூதுக்குழுவினர் நம்புகின்றனர்.
பிரதமர் கார்னிக்கும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையேயான உறவில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, தற்போது இந்தச் சந்திப்பு உறவைச் சீரமைக்க ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
