மருதானையில் இன்று மாலை பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானையிலுள்ள stroke place உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முப்பது பேர் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் இராணுவத்தினரும் இணைந்துள்ளனர்.
