Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்.

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அந்நிலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தில் மாணவர்களின் வகுப்பு தடையை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

அதனை அடுத்து, மாணவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராசிரியர் ரகுராம் தனது கலைப்பீட பீடாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

பேராசியர் பதவி விலக கூடாது என கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட சிலர் கோரி வந்ததுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களும் கோரி வந்தனர்.

அதேவேளை பேராசிரியர் ரகுராமின் இராஜினாமாவை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க கூடாது என கூறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டது.

அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பேரவை கூட்டம் கூட்டப்பட்டு, மாணவர்களின் வகுப்பு தடையை நீக்க கோரி தாம் முன்னர் எடுத்த தீர்மானத்தை மீள பெறுவதாக கூறியதை அடுத்து, ரகுராம் தனது பீடாதிபதி பதவியை தொடர இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து!
அடுத்த செய்தி யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது(Video)

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரை கண்டித்த தமிழ் மக்கள் கூட்டணி.

டிசம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

25 ஆயிரம் நிதியுதவி தரவில்லை கிராம சேவையாளர் மீது 16 வயதான மாணவன் முறைப்பாடு!!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஜூன் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?