கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து பன்னங்கண்டி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 131கிலோ 13கிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை நீதிமன்ற நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
39 வயதுடைய பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

