Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில், மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பில், மன்னார் மாவட்டத்தில் 500 கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை (5) ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டினோசா, கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.

கடலோர சூழலியல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவதிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிப்பதிலும் கண்டல் தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வு வலுப்படுத்தபட்டதுடன், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

முந்தைய செய்தி பருத்தித்துறையில் தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை
அடுத்த செய்தி மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

மின் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் – சஜித்

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

கனகராயன்குளத்தில் யானை தாக்கி ஒருவர் காயம்!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு றிஷாட் எம்.பி நிவாரணங்கள் வழங்கிவைப்பு!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?