Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நல்லூர் மந்திரிமனைக்கு இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குறித்த மந்திரிமனையானது கடந்த 2011ஆம் ஆண்டு தொல்பொருள் சின்னமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்தாக காணப்படுவதால் , அதனை புனரமைக்கவோ பாதுகாக்கவோ முடியாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இருந்துள்ளது.

அந்நிலையில் மந்திரிமனையின் ஒரு பாகம் சேதமடைந்து , உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட வேளை , அவற்றை பாதுகாப்புக்கும் வகையில் இரும்பு கம்பிகளை முட்டுக்கொடுத்து வைத்திருந்தனர்.

அந்த கம்பிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருடர்கள் திருடி சென்ற நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக அப்பகுதி இடிந்து விழுந்துள்ளது.

அதனை அடுத்து , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு , மிகுதியுள்ள மந்திரிமனை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தனர்.

அந்நிலையில் , இடிந்து விழுந்த பகுதியில் உள்ள ஏனைய பகுதிகளை பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரும்பு கம்பிகளை கொண்டு முட்டு கொடுத்து வைத்துள்ளனர்.

முந்தைய செய்தி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகை கேரளா கஞ்சாமீட்பு!
அடுத்த செய்தி மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

உடுவில் பிரதேச செயலகத்தில் விசேட நடமாடும் சேவை

ஆகஸ்ட் 15, 2025
இலங்கை

சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதை பொருளை கொண்டு சென்ற மனைவி கைது.

பிப்ரவரி 18, 2025
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை – திருமதி மாலினி முரளிதரன்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?