Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,நாளைய தினம் வெள்ளிக்கிழமை (19) மாலை கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்படடு வருகின்ற போராட்டம் இன்றுடன் 47 ஆவது நாற்களை கடக்கின்றது.

– மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை(19) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மாலை 2 மணி அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர்.அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேளைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது,ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் 36 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌ கரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன் வைத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும்,மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.எனவே குறித்த போராட்டத்தில் புத்திஜீவிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

அவர்களையும் வரவேற்கின்றோம்.தேசத்தின் குரலாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை (19) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எமது குரல் ஒலிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நல்லூர் மந்திரிமனைக்கு இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு!
அடுத்த செய்தி தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பரப்புரை…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இந்த வருடத்தில் 50 பேருக்கு டெங்கு!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மைத்ரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதுக்குடியிருப்பு மந்துவில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?