Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அனலைதீவு எழுவைதீவுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு வசதி

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அனலைதீவு மற்றும் எழுவைதீவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வசதிகளை அதிகரித்தல் மற்றும் கடல்கடந்த தீவுகளில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்தல் போன்ற விடயங்கள் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆராயப்பட்டன.

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த விடயம் ஆராயப்பட்டது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தேசங்களில் வதியும் சிலர் தன்னார்வமாக இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையமுடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கைக்குரியவர்களை உள்வாங்கி தொழில்முறை ரீதியான குழுவை அமைத்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். அதேநேரம் கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே இதில் மாற்றங்களை உருவாக்கலாம் என ஆளுநர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில்,

அனலைதீவு மற்றும் எழுவைதீவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வசதிகளை அதிகரித்தல் மற்றும் கடல்கடந்த தீவுகளில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இரு தீவுகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் எவ்வாறான வகையில் திட்டங்களை முன்னெடுப்பது என்ற அறிக்கையை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை இலக்குவைத்து முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பது எனக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

தொடர் நடவடிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.

முந்தைய செய்தி டொராண்டோ நகரில் விமான விபத்து
அடுத்த செய்தி யாழில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு முகாம் வழங்கப்படும் உதவிகள்

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதைப்பொருள் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வாந்தி எடுத்த எட்டு வயது சிறுமி உயிரிழப்பு

ஏப்ரல் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?