கனடாவின் புதிய அணு மின் விரிவாக்கத் திட்டத்தின் ஆரம்ப கட்ட அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளிற்கு வெளிநாட்டு விநியோகஸ்தர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி, கனடாவின் எரிசக்தி சுயாட்சி மற்றும் பாதுகாப்பு முக்கியமானது என வலியுறுத்தி வரும் நிலையில், புகனடாவின் புதிய அணு மின் விரிவாக்கத் திட்டத்தின் ஆரம்ப கட்ட அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளிற்கு வெளிநாட்டு விநியோகஸ்தர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் கிளாரிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் Darlington New Nuclear Project திட்டத்தின் கீழ், நான்கு BWRX-300 சிறிய தொகுதி அணு உலைகள் கட்டப்படுகின்றன.
இதில் முதல் அணு உலை 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வலையமைப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணு உலைகள், கனடாவின் பாரம்பரிய CANDU அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இயற்கை யுரேனியத்திற்கு பதிலாக, செறிவூட்டப்பட்ட குறைந்த அளவு யுரேனியத்தை (Low-Enriched Uranium) பயன்படுத்துகின்றன.
சஸ்காட்சுவானில் இருந்து பெறப்படும் யுரேனியம், ஒன்ராறியோவின் Port Hope பகுதியில் செயலாக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவில் செறிவூட்டப்பட்டு அணு எரிபொருள் தொகுதிகளாக தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த எரிபொருள் விநியோகத்தில் பங்கெடுக்க உள்ளன.
கனடா பல தசாப்தங்களாக தனது CANDU தொழில்நுட்பத்தின் மூலம் உள்நாட்டு அணு எரிபொருள் விநியோக அமைப்பை கொண்டிருந்த நிலையில், புதிய தொழில்நுட்ப மாற்றம் காரணமாக வெளிநாட்டு சார்பு அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

