Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

ஜனவரி 28, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வயது மூப்பில் நம்மை ஆட்கொள்ளும் பல வித பிரச்சனைகளில் மூட்டு வலியும் ஒன்று. வயது அதிகரிக்கும் போது, ​​எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் மூட்டு வலி ஏற்படுகின்றது. குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டுவலி இன்னும் அதிகமாகின்றது. இதை சரி செய்ய பலர் பல வித சப்ளிமெண்ட்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். எனினும், இது சிறிது நேரம் மட்டுமே வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

உணவில் சில மாற்றங்களை செய்வதம் மூலம் மூட்டு வலிக்கு நிரந்தர நிவாரணம் காணலாம். சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று வாழைப்பழம். இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்த பழம் மூட்டு மற்றும் முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

வாழைப்பழம் சாப்பிடுவது வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற வாழைப்பழம் எவ்வாறு உதவும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Banana: வாழைப்பழத்தை எப்படி உட்கொள்வது

மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி இருந்தால், எழுந்து உட்காருவதில் சிரமம் இருந்தால், அதை சரி செய்ய, வாழைப்பழம், பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஷேக் செய்து குடிக்கலாம். இந்த ஷேக்கை தயாரிக்க, 2 வாழைப்பழங்கள், 5 முதல் 6 பாதாம் மற்றும் 10 முதல் 12 திராட்சையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த ஷேக்கை தினமும் குடிக்கவும்.

Potassium: பொட்டாசியம் நிறைந்தது

வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பொட்டாசியம் உடலின் அமில-கார சமநிலையை கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டையும் இது நீக்குகிறது. பொட்டாசியம் ஆரோக்கியமான அமில-கார சமநிலையை ஊக்குவித்து, அதன் மூலம் எலும்புகளை பலப்படுத்துகிறது. இந்த வழியில் இது மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை செயலிழக்கச் செய்து மூட்டுகளுக்குள் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் சேதத்தைக் குறைக்க உதவும்.

Magnesium: மெக்னீசியத்தின் நல்ல ஆதாரம்

வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது. இது தசைகள் மற்றும் நரம்புகளை செயல்படுத்த உதவும் ஒரு கனிமமாகும். இது வீக்கம் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது தவிர, மெக்னீசியம் கீல்வாதம் போன்ற நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி அமெரிக்க உணவுப் பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை வைத்த கனடா.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

வெண்டைக்காயில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள்

மே 1, 2025
ஆரோக்கியம்உலகம்

ரத்தம் கொட்ட கொட்ட வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன்-இந்தியாவை உலுக்கிய கொடூர கொலை!

செப்டம்பர் 10, 2024
ஆரோக்கியம்

இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பசியைத் தூண்டும் வெந்தயக் கீரை …..

மார்ச் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?