Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம் அறைகூவல்

ஜனவரி 27, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் . பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவனாக, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்பவனாக சமூகத்திடம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

போதைப்பாவனை எமது சமூகத்தை எல்லா விதத்திலும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகம் மாத்திரமல்ல, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என ஊடுருவியுள்ள போதைப்பாவனை எங்களுடைய சக்தி மிகு இளம் சமுதாயத்தை சீரழித்து வருகிறது

இந்த போதை பாவனை சுயமாக சிந்திக்க கூடிய எங்கள் இளம் சமுதாயத்தை மிக அசிங்கமான வழியில் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.

போதை பாவனையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக , அதனை எதிர்த்து நிற்கும் மிக பெரிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக கருதுகிறேன்.

சக்திமிக்க, உலகத்தையே மாற்றியமைக்க கூடிய மாணவ சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். பாடசாலைகள் இந்த போதைப்பாவனையை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நிற்கின்றன.

இந்த மண் இளம் குருத்துக்களை போதைப்பாவனை அற்ற சமூகமாக உருவாக்கி நின்ற மண்.

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டம் , ஒரு சமூக போராட்டமாக உருவாக வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும், சமூகத்தை பற்றி சிந்திக்க கூடியவர்கள் இந்த தருணத்தை எங்களுக்காக ஒதுக்கி, இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும்.

தனி நபராக சமூகமாக இந்த கால பொறுப்பை பற்றி சிந்தியுங்கள். போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாகும்.

உங்களுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுவித்து , எங்கள் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி அடுத்தவாரம் நெல்லிற்கான நிர்ணயவிலை அறிவிப்பு – கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி
அடுத்த செய்தி இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள் – வன்னி எம்பி திலகன் கோரிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

பிப்ரவரி 8, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய குழந்தை மருத்துவ விடுதி திறந்து வைக்கபட்டுள்ளது!

செப்டம்பர் 14, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா- புதிய சாளம்பைக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

மார்ச் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?