Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அடுத்தவாரம் நெல்லிற்கான நிர்ணயவிலை அறிவிப்பு – கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி

ஜனவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அடுத்த வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பெரும்போக நெல் அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலே, விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் இச்செயற்பாடானது துரிதமாக இடம்பெறவில்லை மற்றும் நெல்லிற்கான நிர்ணய விலை இல்லை என்ற ஆதங்கம் விவசாயிகளின் மத்தியில் இருக்கின்றது என்பதை நாங்கள் அறிகின்றோம்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக அரசினால் நெல் கொள்வனவு செய்யப்படவில்லை. மேலும் மோசடி வியாபாரத்தின் மூலமாக சில வியாபாரிகளினால் அதிகளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டது.

குறிப்பாக நெல் களஞ்சியசாலைகள் பல உரிய பராமரிப்பின்றி கவனிப்பாரற்று காணப்படுவதனால் நெல்லினை கொள்வனவு செய்தாலும் சேமித்து வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

கிளீன் சிறிலங்கா செயற்பாட்டின் ஊடாகவும் அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள், இராணுவத்தினரின் உதவியின் ஊடாக கடந்த வாரத்திலே அவற்றினை புனரமைத்துள்ளோம்.

எதிர்வரும் வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளமையால் விவசாயிகள் இதையிட்டு கவலையடையத்தேவையில்லை.

மேலும் அரசாங்கத்தினால் ஒரு நியாயபூர்வமாக விலை தீர்மானிக்கப்படுவதோடு பாரியளவில் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றோம்.

 

முந்தைய செய்தி வவுனியாவின் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைப்பு.
அடுத்த செய்தி போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம் அறைகூவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 10, 2026
இலங்கை

அச்சத்தில் ராஜபக்ஷக்கள் -இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் நினைவாக புகையிரத நிலையங்களை அழகுபடுத்திய சாரணர்கள்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?