ஒட்டாவாவை அண்மித்த எட்டு பகுதிகளில் உடனடியாக அதிக மரங்கள் நடப்பட வேண்டிய தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒட்டாவா நகரத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட “மர சமத்துவ பகுப்பாய்வு” (Tree Equity Analysis) என்ற ஆய்வின் மூலமே, இது தெரியவந்துள்ளது.
இந்த பகுப்பாய்வு நகரத்தின் எதிர்கால மரங்கள் நடும் முயற்சிகளை முறையாக திட்டமிட உதவும் என நகர கவுன்சிலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டாவா நகர வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை மரம் சார் அடர்த்தியை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அந்த எட்டு பகுதிகளிலும் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் மரங்கள் நடும் பணிகளை தொடங்க ஒட்டாவா நகர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
