ஐக்கிய இராச்சியத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறப்பு துடுப்பாட்ட வீரர், ஹைதர் அலி அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரித்தானிய – பாகிஸ்தானிய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சொந்த நாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
எனினும் விசாரணையின்போது ஹைதர் அலிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற அடிப்படையிலேயே அவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
