இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ஓட்டங்களுடனும், முஸ்பிகூர் ரஹீம் 105 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.