2026ஆம் ஆண்டு ஐபிஎல். இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
ஷேன் வொட்சன் இதற்கு முன்னர் டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் தலைமையில் பணியாற்றியுள்ளார். என்பது குறிப்பிட தக்கது!
