பிரிட்டிஷ் கொலம்பியாவில், வீடற்ற பழங்குடி நபர் ஒருவரை கைது செய்யும்போது, இரண்டு காவல்துறையினர் “அதிகப்படியான வன்முறையைப்” பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காவல்துறை புகார் ஆணையர் ஒரு பொது விசாரணையை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது, காவல்துறைக்கு எதிரான புகார்களை விரைந்து தீர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் குறித்த நபரைக் கட்டுப்படுத்துவதற்காக, டேசர் கருவி (Taser), மிளகு தெளிப்பான் (pepper spray) ஆகியவற்றைப் பயன்படுத்தியதுடன், உடல்ரீதியான தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தியது ஏன் என்பது குறித்த விசாரித்து அறிவது அவசியமானது என, காவல்துறை புகார் ஆணையர் கூறியுள்ளார்.
புதிய சட்டத்தின் கீழ், காவல்துறை புகார் ஆணையருக்கு இதுபோன்ற பொது விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
