களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
