நாட்டில் டெங்கு அதிகரிப்பதன் காரணமாக ஜூன் 30 முதல் ஜூலை 05 வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,207 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 15 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட மாகாணங்களில் மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
