ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பிணையில் செல்வதற்குரிய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியமுடிகிறது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானபோது கைதுசெய்யப்பட்டார்.
அதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
