உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் நெதகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஹல்பத்தர, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரே உயிரிழந்தவர் ஆவார்.