நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமையால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
