முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக தன்மீது விதிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு, பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மனு தொடர்பாக ஆஜராகுமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார். எனினும், மனுவில் கோரப்பட்ட விடயங்கள் தொடர்பாக நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
