யாழ்ப்பாணம், நல்லூரடியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐவர் அடங்கிய குழு, நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதற்காக பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதிவான் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
