நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள மோன்க்டன் நகரின் புறநகர் பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ, அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத்தீயை அணைக்க மோன்க்டன், டியப் (Dieppe) மற்றும் ரிவர்வியூ (Riverview) ஆகிய நகரங்களின் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
உடனடியாக வெளியேற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டாலும், சில குடியிருப்பாளர்கள் அவசர காலத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நகரத்தின் மேயர் எரிகா வாரன் (Erica Warren) தனது ஃபேஸ்புக் பதிவில், தீ இன்னும் கட்டுப்பாட்டில் வரவில்லை என்றும், ஆனால் குடியிருப்பாளர்களை நோக்கி நேரடியாகப் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீ தடுப்பு அகழிகள் தோண்டப்படுவதாக மாகாண இயற்கை வளத் துறை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காட்டுத்தீயை அணைக்கும் பணியால், எல்ம்வுட் டிரைவ் பகுதியில் உள்ள குடிநீரில் அதிக அளவில் கலங்கல் (turbidity) ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மோன்க்டன் மாநகரம் அந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்கு “நீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு” உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
