Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் புதிய நேர சூசி

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது.

நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இதற்கமைய நேற்றைய தினம் சனிக்கிழமை குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது.

இதற்கமைய நாளைய தினம் திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும்.

அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து , குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
அடுத்த செய்தி பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள்! !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 2, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச காடுகள் தின கொண்டாட்டம்..

ஏப்ரல் 5, 2025
இலங்கைமுதன்மை செய்தி

சஜித் தலைமையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் !

பிப்ரவரி 5, 2025
இலங்கை

ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கீழிறங்கியுள்ளது – பொ.ஐங்கரநேசன்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?