Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியை நாடும் பொலிசார்

ஜூலை 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுக்குளத்தின் கீழ் உள்ள பிரதான ஆறான நெத்திலி ஆறு பகுதியில் அண்மைக்காலமாக பெறுமதி மிக்க பல வகை மரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வருகின்றது.

இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஆற்றிலும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களிலும் பல அடித்தளத்திற்கு தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதியில் வாழும் விவசாயிகள் கிராம அலுவலருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்றைய தினம் 22.07.2025தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திஸ்ஸாநாயக்க, கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்கள், கண்டாவளை பிரதேச செயலாக அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் இணைந்து அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருப்பதற்கு 0718592122 எனும் தனது பிரத்தியோக தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்த வேளையிலும் தம்மை தொடர்பு கொண்டு முறையிடுமாறு தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எந்தவித குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடன் தெரிவிப்பதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், இரவு வேளைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!
அடுத்த செய்தி இலங்கையில் “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெண்ணுக்கு விளக்கமறியல்!

நவம்பர் 1, 2025
1
இலங்கை

தமிழக மீனவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

மார்ச் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க தூதரக அதிகாரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?