சஸ்காட்செவான் மாகாண மானிய நிதியை கலைகளுக்காக செலவு செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு (Canadian Taxpayers Federation- CTF) கோரியுள்ள நிலையில்,பல கலைஞர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சஸ்காட்செவான் மாகாணத்தின் கடன் அதிகரித்து வரும் நிலையில், கலைஞர்களின் “தனிப்பட்ட விருப்பப் பணிகளுக்கு” வரி செலுத்துவோர் பணத்தை செலவிடக்கூடாது என்று, கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு வாதிடுகிறது.
ஆனால், சஸ்காட்செவான் மாகாணத்திற்கும், அதன் மக்களுக்கும், கலைகள் வழங்கும் அரிய சேவைகளை கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். சஸ்காட்செவான் மாகாணத்தில், ஆண்டுதோறும் 7 மில்லியன் டொலர் மானியங்களைப் பெற்று நிர்வகிக்கும் SK Arts அமைப்பு, இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி லிசா பேர்ட்-வில்சன், செய்தி நிறுவனமொன்றுக்கு இவ்விடயம் தொடர்பில் பேட்டி அளிக்க முதலில் ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் பின்வாங்கிவிட்டதாக, தெரியவருகின்றது.
