Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம்.

ஜனவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் வெல்லாவெளியில் கொலை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதவானின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று சனிக்கிழமை (4) இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி தெரியவருவதாவது

மாவட்டதிலுள்ள நீதவான் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற பிணையில் வெளியில் எடுத்து தருவதாக தலா ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபா வீதம் 60 ஆயிரம் ரூபாவை கடந்த நவம்பர் மாதம் 18 ம் திகதி இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களை பிணையில் எடுத்து விட்டதையடுத்து பணத்தை இலஞ்சாமாக கொடுத்தவர் இது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த கான்ஸ்டபிளை அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டதுடன் இது தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவினரை விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணித்திருந்தார்.

இதன் போது குறித்த பணத்தை இலஞ்சமாக பெற்றதற்கான ஆதாரத்தை புலனாய்வு பிரிவினர் தேடி விசாரணை செய்து வரும் நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சம் வாங்கியவரின் வங்கி கணக்கிற்கு இலஞ்சமாக வாங்கிய பணத்தை வைப்பிலிட்டுள்ளார். இதனடிப்படையில் இலஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தி பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய குறித்த பொலிஸ் கானஸ்டபிளை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு அறிவுறுத்தலுக்கமைய உடனடியாக அவரை இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம்!
அடுத்த செய்தி யாழில் மேலும் இருவர் மரணம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்!

ஜூன் 14, 2025
இலங்கை

சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

நவம்பர் 27, 2025
இலங்கை

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கவும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?