பிரிட்டிஷ் கொலம்பியாவில் படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் மானியத்தை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் படகு சேவைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கிழக்குக் கடற்கரையில் படகுப் பயணிகளுக்குக் கிடைக்கும் மத்திய அரசின் ஆதரவுடன் ஒப்பிடுகையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் படகுப் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கு மிகக் குறைவான நிதியே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஓகஸ்ட் 1 முதல், கனேடிய மத்திய அரசின் ஆதரவு பெறும் கிழக்கு கனடாவில் உள்ள படகு சேவைகளில் பயணிகள், வாகனங்கள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான கட்டணங்கள் 50 சதவீதம் அளவில் குறைக்கப்படவுள்ளன.
நோவா ஸ்கோசியா மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடோர் இடையே இயங்கும் படகு சேவைகளுக்கான பயணிகள் மற்றும் வாகனக் கட்டணங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
