ஹமாஸ் அமைப்பு தலைவரின் மனைவி கடந்தாண்டு இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டவர், தற்போது துருக்கியில் வாழ்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வரின் மனைவி வேறொரு பெண்ணின் பாஸ்போர்ட் மூலமாக துருக்கி சென்றுள்ளதுடன் அங்கு மறுமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தன்னுடைய குழந்தைகளையும் உடன் அழைத்து சென்ற சமர் முகமது அபுவிற்கு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சகல உதவிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் யாரை திருமணம் செய்துக்க கொண்டார் என்பது பற்றி இன்னும் வெளியாகவில்லை.
