கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற SIRHA Bocuse d’Or இலங்கை 2025 விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் “இது வெறும் உணவு பற்றியதல்ல, இது சிறப்பு, மரபுரிமை, அடையாளம் பற்றியது. இலங்கையின் பங்கேற்பு சமையல் கௌரவத்தை தாண்டி, சர்வதேச உரையாடலில் எம்மை மையப்படுத்துகிறது,” என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2011 முதல் இலங்கை சமையல் தூதர்களை உலக அரங்கிற்கு அனுப்பி வருகின்றது. இது விருந்தோம்பல் துறையின் முன்னேற்றத்தையும், சமையல் கல்வியையும் பிரதிபலிக்கிறது. சுற்றுலாவும் விருந்தோம்பலும் இலங்கையின் பொருளாதார துறைகள் மட்டுமல்ல, எமது அடையாளத்தின் வெளிப்பாடுகளுமாகும். ஒவ்வொரு உணவு அனுபவமும் உலகளாவிய நற்பெயரை உருவாக்கி, மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
Bocuse d’Or இலங்கையின் சமையல் தரங்களை உயர்த்தி, உலகளாவிய குறிக்கோளை ஊக்குவித்து, புதிய தலைமுறை நிபுணர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், பெண் சமையற்கலைஞர்களின் பங்கேற்பு ஊக்கமளிக்கின்றது. என தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் சமையல் சமூக உறுப்பினர்கள் மற்றும் புகழ்பெற்ற அதிதிகள் கலந்துகொண்டனர்.

