ஒட்டாவா-காட்டினோ பகுதிக்கு வியாழக்கிழமை மாலை விடுக்கப்பட்ட அனைத்து வானிலை எச்சரிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளதாக கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒட்டாவாவின் தென்மேற்கே உள்ள ஷார்போட் ஏரிப்பகுதிக்கு ஒரு குறுகிய நேர சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.
ஷார்போட் ஏரி அருகே சூறாவளியை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு புயல் கிழக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால், 20 நிமிடங்களுக்குள், அந்த எச்சரிக்கை ஒரு கடுமையான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கையாக மாற்றப்பட்டது.
ஒட்டாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு ஒன்டாரியோ சமூகங்கள் பலவற்றிலும், பின்னர் மேற்கு கியூபெக்கிலும் இரவு 10 மணி வரை பரவலான சூறாவளி ஏற்படும் அபாயம் நிலவியது.
வானிலை எச்சரிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ள போதும், கடுமையான வானிலையின் போது வீடுகளுக்குள் தங்குமாறும், முடிந்தால் வீடுகளின் அடித்தளத்தில் தங்குமாறும் கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் பரிந்துரைக்கிறது.
