துருக்கி நாட்டில் மத்திய எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணியில் 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்துதாகவும் அந்நாட்டு வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி தெரிவித்தார்.
மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, காற்று திசை மாறி வீசியதால், 24 பேர் தீயில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
