இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்னாள் வீரரான றொபேர்ட்டோ பெர்மினோ, தற்போது கட்டாரின் அல்-சாட்டோடு இணைந்துள்ளார்.
இந்நிலையில் லிவர்பூல் கழகத்திலிருந்து 33 வயதான பெர்மினோ விலகுவதை நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தியதையடுத்து, கட்டாரின் அல்-சாட்டோடு இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.