யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய அகழ்வின் போது, மேலும் 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
ஏற்கனவே இந்த பகுதியிலிருந்து 65 என்புக்கூட்டுத் தொகுதிகள், இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் சட்டத்தரணி வி எஸ் நிரஞ்சன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
