இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கோரியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், இந்திய அணிக்காக விராட் கோலி, மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு ஒருமாத காலத்துக்கு முன்னர் விராட் கோலி தமது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


