இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை, இங்கிலாந்து வீரர்கள் காயப்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வரும் ஜஸ்பிரிட் பும்ரா, மூன்றாவது போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி கொண்டிருந்தபோது, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப்போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைச் சமாளித்து துடுப்பெடுத்தாடிய, ஜஸ்பிரிட் பும்ரா, 54 பந்துகளை எதிர்கொண்டு 5 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்போது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய முயன்ற இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களான ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பவுன்சர் பந்துகளை வீசி அவரை காயப்படுத்த முயன்றனர் என்று இந்திய அணி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
