விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்திற்கு “தலைவன் தலைவி” என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இப்படம் வரும் 25ம் திகதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது .
