தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.
இறுதியாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகியிருந்தது.
தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார்.
இவ்வாறு திரைப்படம் இயக்குவதையும் தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் திரைப்படம் தான் குபேரா திரைப்படம்.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகின்ற ஜுன் மாதம் 20-ம் திகதி திரைக்கு வர உள்ளது.
தற்போது, தனுஷ் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத் திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கின்றார்.
இந்நிலையில், இத்திரைபடத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் தனுஸினுடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார்.
இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கின்றது.
தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



