பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரில் வெள்ளிக்கிழமை கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினர், மாகாணத்தில் பெருகிவரும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மற்றொரு பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஜேம்ஸ் எட்வர்ட் ப்ளோவர் (James Edward Plover) என்பவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே குடும்ப வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்லி ப்ளோவரின் கொலை, மாகாணம் சார்பாக நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அறிக்கை வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
அந்த அறிக்கையில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாலின அடிப்படையிலான வன்முறை “சாதாரணமாகிவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கிம் ஸ்டான்டனின் (Kim Stanton) அறிக்கை, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் 48 சதவீதம் பேர் தனிப்பட்ட உறவுகளில் வன்முறையை அனுபவித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
