இந்த ஆண்டுக்கான கனடா தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாக, மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து அதை அந்நாட்டின் 51 ஆவது மாநிலம் ஆக்குவதற்காக, அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான கனடா தினத்தின் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளது.
கனடாவின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும் பறைசாற்றுவது முன்னெப்போதையும் விட, இப்போது மிக அவசியம் என உணர்வதாக வின்னிபெக் நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பாரம்பரிய கனடா தினக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, கனடாவின் சுதேசிய கலாசாரம் மற்றும் வரலாற்றுக்கும் இம்முறை முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
