Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று பெல்லே ப்ளைன் அருகே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 வயது ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் சஸ்காட்செவானில் ஆரம்பமாகியுள்ளன.

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நெடுஞ்சாலை 1 இல் நீடித்த ஒரு பதட்டமான சூழ்நிலைக்குப் பிறகு, புக்கரின் மரணத்திற்கான உண்மைகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பரிந்துரைகளை வழங்குவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.

மூஸ் ஜாவ் சூப்பர்ஸ்டோர் வாகன நிறுத்துமிடத்தில் தனது காரில் அமர்ந்து ஒருவர் அச்சுறுத்தி வருவதாக, காவல்துறைக்கு, கிடைத்த தகவலுக்குப் பிறகே, புக்கரின் மரணம் நிகழ்ந்தது.

பின்னர், அந்த வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய புக்கர், பெல்லே ப்ளைன் அருகே ஒரு பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு காவல்துறையினருடன் அவர் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஆறு மணி நேர மோதலுக்குப் பிறகு, புக்கர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்த விசாரணையில், புக்கருடன் ஆறு வருடங்கள் உறவில் இருந்த கைட்லின் ஹோஃபர் சாட்சியமளித்தார்.

புக்கர் தங்களைச் சந்திப்பதற்கு சற்று முன்னரே மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் இறப்பதற்கு “ஒரு வருடத்திற்கும் மேலாக” மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் ஹோஃபர் தெரிவித்தார்.

புக்கரின் தந்தை பாரி நோசால் சாட்சியமளித்தபோது, தனது மகன் போதைக்கு அடிமையாகியிருந்ததை அல்லது மனநலப் பிரச்சினைகளுடன் போராடி வந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.

புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் சஸ்காட்செவானில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இஸ்ரேல் மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை ஈரான் அறிவிப்பு!
அடுத்த செய்தி யாழில் வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

அல்பர்ட்டா தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி ஒப்பந்தம்

மே 16, 2026
கனடா

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த கியூபெக் முதல்வர்

ஜூலை 15, 2026
கனடாமுதன்மை செய்தி

புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

ஜூலை 10, 2025
கனடா

மருத்துவர்களுக்கு கனேடிய நிரந்தர வதிவுரிமை

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?