நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்கு உள்ளாகினர்.
குறித்த போராட்டமானது பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு சிக்கல், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி குறித்த போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
