வவுனியா – புளியங்குளம் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் புளியங்குளம் காவல்துறையினரிடம் கொலை செய்ததாக சரணடைந்த பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சரணடைந்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரது மனைவியின் சடலம் சின்னப்பூவரசங்குளம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
