ஆசியர் தண்டித்த காரணத்தினால் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , குடும்பத்தினரால் காப்பற்றப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன், விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்கு சென்றமை சென்றமையினால் ஆசியர் மாணவனை தண்டித்துள்ளார்.
அந்நிலையில் , பாடசாலையில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவன் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டார் மாணவனை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
