இந்த நடைமுறையை மனிதாபிமானமற்றது என Bloc Québécois உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். நீண்ட நேர விவாதங்களால் உறுப்பினர்கள், சாட்சியமளித்தவர்கள் மற்றும் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விவாதத்திற்குச் செலவிடப்பட்ட நாட்களின் எண்ணிக்கையை விட மொத்த மணிநேரங்களே முக்கியம் எனத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, இந்தச் செயல்முறை மிகையானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதிகளை விரைவுபடுத்துதல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு முன்கூட்டிய அனுமதி வழங்குதல் மற்றும் தொழிற்சங்க கூட்டு ஒப்பந்த நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருதல் ஆகியவை இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
சட்டமூலம் தொடர்பான மேலதிக ஆய்வுகளை கனடா செனட் சபையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
