யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாக கடந்த 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மேடகொட, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்று வியாழக்கிழமை (26.11.2026) மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில், 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன், 512ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் லங்கா அத்துக்கோரள மற்றும் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் WMAM நிசங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
