திங்கள் கிழமை கியூபெக்கில் நிலவிவருகின்ற வானிலை மற்றும் மழையின் விளைவாக ஆறுகளின் நீர்மட்டம் நிரம்பி வழிந்து உயர்ந்ததை அடுத்து,பல பகுதிகள் வெள்ளக் கண்காணிப்பில் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை போஸாவில் நகரசபைக்குட்பட்ட சௌடியர் ஆற்றின் குறுக்கே உள்ள வீதிகள் நகர மையத்தில் பனிக்கட்டிகள் உருகியதன் காரணமாக , ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வீதிகளை தாண்டி நீர்பாய்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிகங்களை காலி செய்யுமாறு ஆற்றின் கண்காணிப்புக் குழு காலை 7 மணியளவில் எச்சரிக்கை விடுத்தது. அதனை தொடர்ந்து உள்ளூர் பகுதியில் அமைக்கப்பட்ட அவசரகால தங்குமிடம் திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்க நடவடிக்கையினை நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.